1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (09:52 IST)

தலைமை ஆசிரியயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன் கைது

ஹரியானாவில் பள்ளி தலைமை ஆசிரியயை மாணவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் யமுனா நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுருந்து வந்தவர் ரித்து சாஹப்ரா(47). கேசவ் என்ற மாணவன் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். அந்த மாணவன் சரிவர படிக்காததால் ரித்து கேசவை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தலைமை ஆசிரியயை கொல்ல திட்டமிட்டு, தனது தந்தையின் துப்பாக்கியோடு பள்ளிக்கு சென்றுள்ளான். தலைமை ஆசிரியையின் அறைக்கு சென்ற கேசவ், ரித்துவை சரமாரியாக சுட்டுள்ளான். இதில் ரித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழதார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவன் தலைமை ஆசிரியயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.