பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு எஜமானான நாய்கள்!
குஜராத் மாநிலத்தில் அறக்கட்டளை மூலம் வளர்க்கப்படும் ஒவ்வொரு நாய்களுக்கும் பல கோடி ரூபாய் சொத்து உள்ளது.
குஜராத் மாநிலம் மெக்சனா பகுதியில் உள்ள பஞ்சோத் என்ற கிராமத்தில் தெருநாய்களை வளர்ப்பதற்கு தனியாக அறக்கட்டளையை கிராம மக்கள் 70 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இதற்காக நன்கொடையாக 8 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் நாய்களுக்கு பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாய்களுக்கு தனியாக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு 70 நாய்கள் உள்ளன.
கிராம மக்கள் நாய்களுக்கு சேவை செய்வதை தங்களது முக்கிய பணியாக கருதி உதவி வருகிறார்கள். இந்த நாய்கள் பாதுகாப்பு இல்லம் அருகே பைபாஸ் சாலை இருப்பதால் நிலத்தில் மதிப்பு தற்போது ரூ.100 கோடிக்கு மேல் உள்ளது. இதனால் அங்குள்ள ஒவ்வொரு நாயும் பல கோடி சொத்து கொண்டதாக கருதப்படுகிறது.
மேலும் அங்கு மாடுகள் பராமரிப்பு மையம், பறவைகள் பராமரிப்பு மையம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.