1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (07:05 IST)

720க்கு 705 மார்க் நீட் தேர்வில் எடுத்த மாணவி பிளஸ் டூ தேர்வில் தோல்வி.. குஜராத்தில் வினோதம்..!

NEET
நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண் எடுத்த குஜராத் மாணவி பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். அதன் பிறகு ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணை தேர்வு எழுதிய நிலையில் அந்தத் தேர்விலும் அவர் தோல்வி அடைந்திருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் அவர் நீட் தேர்வு எழுதிய நிலையில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவர் இயற்பியல், வேதியியல் பாடங்களில்   தோல்வியடைந்ததால் அவரால் மருத்துவ படிப்புக்கு சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் வேதியியல் பாடத்தில் கூட தேர்ச்சி பெற முடியாத ஒரு மாணவி எப்படி நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்றிருப்பார்? எனவே அவர் முறைகேடு செய்து தான் தேர்ச்சி பெற்றிருப்பார் என்று புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

குஜராத் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் நீட் தேர்வில் எடுத்தவர் என்று பெயர் பெற்ற இந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலை இருப்பது வெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva