ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (08:41 IST)

First Airplane Restaurant - குஜராத்தில் புது முயற்சி!

குஜராத் மாநிலம் வதோதராவில் விமானம் சார்ந்த உணவகம் வாடிக்கையாளர்களின் புது அனுபவத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

 
விமானம் சார்ந்த உணவகத்தின் உரிமையாளர் முகி இது குறித்து தெரிவித்துள்ளது பின்வருமாறு... பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ் 320 ரக விமானத்தை வாங்கினோம். விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் வதோதராவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உணவகமாக மாற்றி அமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
 
இந்த விமான உணவகத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விமான உணவகத்தில் பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியின் மற்றும் தாய் உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு சமைக்கப்படுகிறது.