செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (13:23 IST)

தன்னை கடித்த பாம்பை பையில் எடுத்த வந்த இளைஞரால் பரபரப்பு

தன்னை கடித்த பாம்பை பையில்  எடுத்த வந்த இளைஞரால் பரபரப்பு
நாகை அரசு மருத்துவமனைக்கு  தன்னை கடித்த பாம்பை பையில் எடுத்த வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள கல்லுழி திருவாசல் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் மகேந்திரன்( 21வயது). இவர் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வீதி உலா நடந்தது.

மகேந்திரன் தன் வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் வீதி உலாவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அருகே வந்த ஒரு சாரை பாம்பு அவரை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன் அருகில் இருந்தவர்கள்  உதவியுடன் அந்த பாம்பை அடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பாம்பை ஒரு பையில் போட்டு கொண்டு நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவர் பாம்புடன் இருந்ததைப் பார்த்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.