1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (09:27 IST)

முன்னாள் எம்.எல்.ஏ. மகன் சாலை விபத்தில் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் டெல்லியில் நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ வான மணிஷங்கரின் மகன் சவர்னிம் ஷங்கர் டெல்லியின் மஹிலாப்பூர் பகுதியில் இருந்து நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். வசந்த்குஞ்ச் பகுதியில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சவர்னிமை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ வின் மகன் சாலை விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.