1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (10:42 IST)

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீயணைப்பு சிலிண்டர்! – மோசடி கும்பலை பிடித்த போலீஸ்!

இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு பதிலாக தீயணைப்பு சிலிண்டரை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை நெருங்கி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பலர் ஆக்ஸிஜனை வெளியில் வாங்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஒரு பெண் தனது உறவினர் ஒருவருக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியுள்ளார். வாங்கி வந்த பின் தான் அது ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை, தீயணைக்க உதவும் சிலிண்டர் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்த நிலையில் தீயணைப்பு சிலிண்டரை கொடுத்து ஏமாற்றிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.