செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (10:25 IST)

கண்டெய்னர் ஓட்டல் போல இது ஏரோப்ளேன் ஓட்டல்! – ட்ரெண்டாகும் குஜராத் ஓட்டல்!

குஜராத்தில் திறக்கப்பட்டுள்ள விமான ஓட்டல் ஒன்றின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் உணவகங்கள் மற்றும் உணவுகளில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வித்தியாசமான பல உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. கண்டெய்னர்களை பயன்படுத்தி அமைக்கப்படும் உணவகங்கள், ரயில் பெட்டி போன்ற அமைப்பில் கட்டப்படும் உணவகங்கள் என இவற்றிற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவும் உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் வடடோராவில் விமானத்தை ஓட்டலாக வடிவமைத்துள்ளனர். இதற்காக பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஏர்பஸ் விமானம் ஒன்றை வாங்கி அதை ஓட்டலாக வடிவமைத்துள்ளனர். இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் தருவது போல டிக்கெட் வழங்கப்படுகிறதாம். மேலும் உணவக ஊழியர்களும் விமான பணியாளர்கள் போல உடையணிந்து பரிமாறுகிறார்களாம்.