புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (15:19 IST)

பெண்ணிடம் செல்போன் எண் கேட்டால் அது பாலியல் குற்றமாகாது: குஜராத் உயர் நீதிமன்றம்

ஒரு பெண்ணிடம் மொபைல் எண் கேட்டால் அது பாலியல் குற்றமாகாது என்றும் இதற்கெல்லாம் எஃப் ஐ ஆர் போடக்கூடாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண், ஒருவர் தன்னிடம் செல்போன் எண், முகவரியை கேட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சமீரா ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஒரு பெண்ணிடம் செல்போன் எண்ணை கேட்டதற்காக பாலியல் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் என்றும். சமீரா ராய் செல்போனை பிடுங்கி சில தகவல்களை அழித்திருக்கிறார்கள் என்றும் இது தொடர்பாக கேள்வி கேட்டதால் சமீரை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள் என்றும் சமீர் ராய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி யாராவது உங்கள் செல்போன் எண்ணை கேட்டால் அது உங்களை புண்படுத்தலாம், ஆனால் அதற்காக எஃப் ஐ ஆர் போடும் அளவுக்கு அது குற்றமில்லை என்றும் இந்த இளைஞரின் செயல் பொருத்தமற்றதாக இருந்தாலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு குற்றச்சாட்டில் வழக்கு தொடரும் அளவுக்கு குற்றம் ஆகாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Edited by Siva