முஸ்லீம்களுக்கு 150 நாடுகள் இருக்கின்றது, அங்கே போகலாமே! குஜராத் முதல்வர்
முஸ்லீம்களுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் தஞ்சம் அடைவதற்கு 150 நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடு மட்டுமே இருப்பதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நேற்று அகமதாபாத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்ட குஜராத் விஜய் ரூபானி செய்தியாளர்களிடம் கூறியபோது ’இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் 22 சதவீத இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது வெறும் 3 சதவீத இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அதேபோல் வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரியும் போது அங்கு 2000 இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 500 இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர்
இவ்வாறு இந்துக்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளிலிருந்தும் விரட்டி அடிக்கும் போது ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உள்ளது. முஸ்லிம்களுக்கு ஒரு நாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் செல்வதற்கு உலகில் 150 நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரே நாடு மட்டுமே இருப்பதால் அவர்களை ஆதரிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்று கூறினார். குஜராத் முதல்வரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது