வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (19:28 IST)

அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கி வருகின்றனர். அரசு பள்ளிகளின் தரம் மற்றும் வசதி இன்மையே இதற்குக் காரணமாக இருப்பதாக கூறப்பட்டது
 
ஆனால் சமீபகாலமாக தமிழகம் உள்பட அனைத்து பல மாநிலங்களில் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது 
 
இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என சட்டத்தை கொண்டு வரவேண்டும் என ஜார்கண்ட் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர்  ஜகர்நாத் மதோ அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது 
இதுகுறித்து அமைச்சர்  ஜகர்நாத் மதோ மேலும் கூறியபோது, ‘தனியார் பள்ளிகளில் படித்து விட்டு அரசு பணிக்கு மக்கள் செய்வது நியாயமில்லை என்றும் அரசாங்க வேலை வேண்டும் என நினைத்தால் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்த திட்டத்தை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் அரசு பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசு செலவழித்து வருவதாகவும் இதனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் படை எடுத்து வருவதாகவும் இது அரசுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்