திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:35 IST)

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



 
 
ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பான் கார்டில் உள்ள பெயருக்கும் சிறு வித்தியாசம் இருந்தாலும் இணைப்பு சாத்தியமில்லை என்பதால் இதை சரிசெய்ய அவகாசம் தேவை என்று பல்வெறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் இந்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டையை பெற்று கொள்ளவும் இதே டிசம்பர் 31தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.