வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (12:32 IST)

மஹாராஷ்டிரா விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 14 நாட்கள் அவகாசம்

மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக  பாஜக தரப்பு வக்கீல் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்தது குறித்து ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதன் தீர்ப்பு நாளை 10.30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிரூபர்களுக்கு பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேட்டியளித்தார். அப்போது, மஹாராஷ்டிரா சட்டபேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுத்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.