புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (08:00 IST)

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்..  ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!
ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய தவறான பாதையில் பயணித்ததால், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாகனத்தில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பில்வாராவுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட ஒரு குடும்பம், தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகன ஓட்டுநர், வழி காட்டுவதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். மேப், உடைந்த ஒரு தரைப்பாலம் வழியாக செல்லும்படி வழி காட்டியுள்ளது.
 
ஓட்டுநர் அந்த பாதையில் சென்றபோது, கனமழை காரணமாக ஆற்றில் அதிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. உடைந்த பாலத்தில் இருந்த வாகனம், வெள்ளத்தில் சிக்கி ஆற்றுக்குள் அடித்து செல்லப்பட்டது. இந்த விபத்தில், குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதல் காரணமாக நிகழ்ந்த இந்த விபத்து, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 
Edited by Siva