1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Goat pick important document from govt office

முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!

ஆடு
முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!
அரசு அலுவலகத்தில் திடீரென நுழைந்த ஆடு, முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விக் கொண்டு சென்றதை அடுத்து அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு அலுவலகம் ஒன்றில் அரசு ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரசு அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு, முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் அந்த ஆட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதில் தோல்வி அடைந்தனர் என்பதும் அதற்குள் ஆடு அரசு ஆவணங்களை வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது இந்த சம்பவத்தால் கான்பூர் அரசு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் ஒமிக்ரான் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!