1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (11:25 IST)

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சங்கஹ்லிம் தொகுதியில் முன்னிலை!

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சங்கஹ்லிம் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சங்கஹ்லிம் தொகுதியில் 366 முன்னிலை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ் சக்லானி திரு சாவந்தை விட 446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
 
கோவாவில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 13 இடங்களுடன் பின்தங்கியது. திரிணாமுல் காங்கிரஸுக்கு 5 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 1 இடமும் மட்டுமே கிடைத்தன என்பது கூடுதல் தகவல்.