1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (17:14 IST)

கற்பழிக்க முயன்ற வாலிபர் - ஆணுறுப்பை வெட்டி எறிந்த பெண்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த வாலிபரின் ஆணுறுப்பை ஒரு பெண் வெட்டி எறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேசத்தில் துர்காபூர் எனும் கிராமம் உள்ளது. அங்கு, இரவில் வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் மனோஜ்குமார் என்ற நபர் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், பயப்படாத அந்த பெண், தைரியமாக செயல்பட்டு அவரை தாக்கி கீழே தள்ளி, அவரின் கை கால்களை கட்டுப் போட்டார். அதன் பின் அவரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
 
விரைந்து வந்த போலீசாரின் அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தைரியமாக செயல்பட்ட அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.