செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (22:23 IST)

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

கேரள மாநிலத்தில் காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண்குமார்  இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஷீபா இருவரும் ஃபேஸ்புக் மூலம் காதலித்து வந்தனர்.

ஆனால், ஷீலாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது அருண்குமாருக்கு தெரிந்ததும் அவருடன் பேசுவதை துண்டித்துள்ளார்.

இதையத்து, அருண்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்ததை அறிந்த ஷீலா அருண்குமாரை இருக்கிக்கு வருவழைத்து உள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷீலா அருண்குமார் முகத்தில் ஆசிட் வீசினார்.

பின்னர் அருண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பார்வை பறிபோயுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷீலாவை கைது செய்தனர்.