1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (15:30 IST)

’ஓவியரை காதலிக்கிறேன்’... நடிகை ஸ்ருதிஹாசன்’ ஓபன் டாக்’’

பிரபல நடிகையும் நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் ஓவியரைக் காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து,தனுஷின் 3, விஜய்யுடன் புலி,அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது காதலரும் ஓவியருமான சாந்தனு ஹசரிகாவுடன் மும்பையில் உள்ள தனி வீட்டில் வசித்து வரும் நிலையில்   ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடிகை மந்திராபேடி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது,ஸ்ருதிஹாசன் தான் சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரைக் காதலிப்பதை உறுதி செய்தார்.