செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (15:54 IST)

கல்லூரி மாணவியை லாட்ஜில் அடைத்து 10 நாட்களாக கற்பழித்த கும்பல்....

17 வயது கல்லூரி மாணவியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து 4 பேர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூர் ஒய்ட்பீல்டு பகுதியில் உள்ள ‘கிளாசிக்கல் இன்’என்ற ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட கல்லூரி மாணவி சமீபத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார். விசாரணையில், அந்த பெண்ணை அடைத்து வைத்து 10 நாட்களாக 4 பேர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் மனோரஞ்சன் பண்டிட்(52) உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதில், ராகவேந்திரா(27) மற்றும் சாகர் ஆகியோர் லாட்ஜுக்கு அருகில் டீ ஸ்டால் மற்றும் பால் பூத் வைத்து நடத்தி வருகின்றனர். மஞ்சுராஜ்(32) அவர்களின் நண்பர் எனத் தெரிகிறது. அவர்கள் மூவரும்,  நண்பர் ஒருவர் அழைப்பதாய் அந்த பெண்ணை அழைத்து சென்று லாட்ஜில் அடைத்து வைத்து 10 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
விஷயம் அறிந்த லாட்ஜ் உரிமையாளர் மனோரஞ்சன் போலீசாரிடம் கூறப்போவதாக தெரிவிக்க, நீங்களும் அந்த பெண்ணை அனுபவியுங்கள் என அவர்கள் டீல் பேசியுள்ளனர். சபலமைடந்த மனோரஞ்சனும் அதை ஏற்றுக்கொண்டு 10 நாட்களாக அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
அப்பெண்ணை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தும் போலீசார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அப்பெண்ணை பற்றிய செய்தி செய்தி தாளில் வெளியான பின்பே, போலீசார் விசாரணையில் ஈடுபட்டு அப்பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.
 
அந்த நால்வர் மீதும் கற்பழிப்பு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.