புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (10:46 IST)

கல்லீரல் தின்றால் குழந்தை பிறக்கும்… மூடநம்பிக்கையை நம்பி சிறுமியைக் கொன்ற கும்பல்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கல்லீரல் தின்றால் குழந்தை உருவாகும் என நினைத்த தம்பதிகள் அதற்காக ஒரு சிறுமியைக் கடத்தி கொலை செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியான அவரது பெற்றோர் அவரை தேட ஞாயிற்றுக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் வயிறு அறுக்கப்பட்டு அதில் இருந்து கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் சிறுமியின் அருகாமை வீட்டுக்காரர்களான அங்குல் மற்றும் பீரான் ஆகியோரை விசாரணை செய்த காவல்துறையினர். அப்போது 20 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதியினர் ஒருவர் குழந்தையின் கல்லீரலை தின்றால் குழந்தை பாக்கியம் இருக்கும் என நம்பி இவர்களுக்குக் கொடுத்த பணத்துக்காக சிறுமியைக் கடத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கடத்திய சிறுமியிடம் இரவில் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.