1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:53 IST)

தூக்க கலக்கத்தில் எலி மருந்தில் பல் துலக்கிய இளம்பெண் பரிதாப பலி!

தூக்க கலக்கத்தில் எலி மருந்தில் பல் துலக்கிய இளம்பெண் பரிதாப பலி!
தூக்க கலக்கத்தில் எலி மருந்தை டூத்பேஸ்ட் என தவறாக பல் துலக்கிய 18 வயது இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மும்பையில் உள்ள தாராவியில் 18 வயது இளம்பெண் ஒருவர் இன்று காலை தூங்கி எழுந்தவுடன் பல் துலக்கும் பிரஷ் மற்றும் டூத்பேஸ்ட்டை எடுத்து சென்றார். அவர் பல் துலக்கி கொண்டிருக்கும் போது திடீரென டூத்பேஸ்ட் வித்தியாசமான வாசனை அடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
 
அதன்பிறகுதான் தான் எடுத்தது டூத் பேஸ்ட் அல்ல, எலி மருந்து என்பது தெரியவந்தது.  இதனை அடுத்து அவரது உடல் திடீரென பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை தாராவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தூக்கக்கலக்கத்தில் டூத்பேஸ்ட் என நினைத்து தவறாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியதால் 18 வயது பெண் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது