1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (13:19 IST)

நெற்றி பொட்டில் குண்டு காயம், எரிந்த நிலையில் சிறுமியின் சடலம்: பீகாரில் பகீர்!

பீகாரில் 16 வயது சிறுமி ஒருவர் நெற்றில் குண்டு காயத்துடன், எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹைதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அந்த அதிர்ச்சி சம்பவத்தின் துயரம் மறைவதற்குள் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியது. பெண் டாக்டர் எரித்துக் கொல்லப்பட்ட பகுதிக்கு சிறிது தொலைவிலேயே மற்றொரு பெண்ணும் எரித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த துயரத்தோடு சேர்த்து மேலும் ஒரு பெரும் துயரமாக பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். 
 
அந்த சிறுமியின் நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளதும் கண்டுபிடிகப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டாரா என தெரியாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிறுமியின் சடலம் கிடைத்த இடத்தையும் சோதனையிட்டு வருகின்றனர்.