திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (14:54 IST)

மகளை வம்பிழுத்த இளைஞர்; தட்டி கேட்க சென்ற தாயை அடித்து வெளுத்த ஆசாமி!

உத்தர பிரதேசத்தில் மகளை வம்பிழுத்த நபரை தட்டி கேட்க சென்ற தாயை அந்நபர் நடுரோட்டில் வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் இளம்பெண் ஒருவரை அப்பகுதியில் உள்ள ஒரு நபர் பாலியல் ரீதியாக வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெண்ணின் தாயார் அந்நபரின் வீட்டிற்கு சென்று ஆவேசமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் அந்த பெண்ணின் தயாராய் நட்ட நடு வீதியில் ஆக்ரோஷமாக அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பான சிசிடிவியில் பதிவான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள காஸியாபாத் போலீஸார் பெண்ணை அடித்த ஆசாமியை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.