வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (12:15 IST)

கார்கேவை பிரதமராக்க இந்தியா கூட்டணி ஆலோசனை.. அதற்கு கார்கே சொன்னது என்ன தெரியுமா?

Mallikarjun Kharge
நேற்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் கார்கேவை  பிரதமராக்க ஆலோசனை கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் கூடி இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளது.

இந்த கூட்டணியின் முதல் மூன்று கூட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று நான்காவது கூட்டம் நடைபெற்றது என்பதும் இதில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சில தலைவர்கள் கூறிய போது அதற்கு கார்கே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  முதலில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அதன் பிறகு யார் பிரதமர் என்று பின்னர் விவாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.  

கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva