1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:42 IST)

இன்ஸ்டாகிராமில் பழகி மாணவி பலாத்காரம்- 3 பேர் கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பிளஸ்1 மாணவியை வன்கொடுமை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள பெருமாதுறை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜசீர்(26). இவர், இன்ஸ்டாகிராம் மூலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழகியுள்ளார்.

இவர்கள் இரண்டு பேரும் புகைப்படங்கள் பகிர்ந்து அடிக்கடி பேசி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மாணவியை நேரில் வரவழைத்துப் பேசியுள்ளனர்.

பின்னர் குண்டராவுக்கு அவரை காரில் ஏற்றிச் ச்என்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுறது.

மாணவியைக் காணாததால் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். இந்த நிலையில், மாணவியைப் பலாத்காரம் செய்த ஜசீர் அவரது நண்பர்களான நவுபல்,  நியாஸ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.