1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (14:06 IST)

அடுத்தாண்டு முதல் இரண்டுமுறை பொதுத்தேர்வுகள்!

Dharmendra Pradhan,
விரைவில் ஆண்டிற்கு 2  பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது.
 
தற்போது ஆண்டிற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில்,  இனி, ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 202 -2026 ஆம் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும் என மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 
மேலும், பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசியக் கல்விக் கொள்ளையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.