ஒரு ரூபாய்க்கு சுவையான, சத்தாண உணவு! – சொந்த காசில் கேண்டீன் திறந்த கவுதம் கம்பீர்!
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி எம்.பியுமான கௌதம் கம்பீர் தனது சொத்த செலவில் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஒரு ரூபாய் கேண்டீனை திறந்துள்ளார்.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்து, மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில் அரசியல் பணிகளுக்கிடையே தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக சொந்த செலவில் கிழக்கு டெல்லியில் புதிய உணவகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அரிசி சோறு, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட சுவையான சத்தான உணவை இந்த கேண்டீன்களில் ஒரு ரூபாய்க்கு சாப்பிட முடியும். ஒரே நேரத்தில் 100 பேர் வரை அமர்ந்து உண்ண கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேண்டீனில் தற்போது கொரோனா காரணமாக 50 பேர் அதிகபட்சம் அனுமதிக்கபடுகின்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு எந்த வித பாகுபாடும் இல்லாமல் சத்தான உணவும், சுகாதாரமான குடிநீரும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் இதுபோல மொத்தம் 10 கேண்டீன்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.