தேர்தல் முடிவு – பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

Last Modified திங்கள், 20 மே 2019 (13:37 IST)
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 
 
தேர்தல் முடிந்ததை அடுத்து பங்குச்சந்தை உயர ஆரம்பித்துள்ளது. அதேபோல வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே பெட்ரோல் விலையும் உயர ஆரம்பித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக பெரிதாக பெட்ரோல் விலை உயர்த்தப்படாத நிலையில் இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 10 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
சென்னையில் பெட்ரோல் விலை 73.72 ரூபாயிலிருந்து 73.82 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் விலை 69.72 ரூபாயிலிருந்து 69.88 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :