1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (11:25 IST)

கங்கையில் நீராட வேண்டாம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

gangai river
கங்கை நதி குளிப்பதற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பதால் அதில் யாரும் குளிக்க வேண்டாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே கங்கை நதி தூய்மையாற்று இருப்பதாகவும் அதில் ஆலைகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இப்படி ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கங்கை ஆற்றை பொதுமக்கள் குளிக்க தகுதி இல்லாத இடமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் தினமும் 258.67 லிட்டர் சுத்திகரிக்க படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 
 
கங்கை நதியில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கும் நிலையில் கங்கை நதி குளிக்க தகுதியற்ற நதி எனது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran