செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (19:44 IST)

நாளை முதல் கவுன்டவுன் ஆரம்பம்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக உள்பட கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே ஆட்சி அமைக்க கடந்த ஒரு மாதமாக தீவிர முயற்சியில் இருந்தன. பாஜக ஒரு படி மேலே போய் ஆட்சியும் அமைத்துவிட்டது. ஆனால் அந்த ஆட்சி 52 மணி நேரத்தில் கவிழ்ந்ததால் தற்போது சிவசேனா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது 
 
சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் மற்றும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் நாளை பொறுப்பேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகராக பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது 
 
இந்த நிலையில் நாளை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் இந்த ஆட்சி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது: பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 3 கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ அப்போதுமுதல் அவர்கள் கவுன்டவுன் ஆரம்பம்’ என்று கூறியுள்ளார்.