புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (08:16 IST)

இன்று முதல் திருப்பதி கோவில் திறப்பு: வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போதைய ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தளங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது
 
இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் இன்னும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படவில்லை 
 
இந்த நிலையில் திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. இன்றும் நாளையும் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் பத்தாம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் பதினோராம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
மேலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்துகொள்ள வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்பட சில அறிவுறுத்தல்களை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்படுவதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்