புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (18:08 IST)

திருப்பதி தேவஸ்தானம் பற்றி தவறாகப் பேசினாரா சிவக்குமார்? வழக்குப்பதிவு!

நடிகர் சிவக்குமார் திருப்பதி தேவஸ்தானம் பற்றி இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். சினிமாவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே ஒதுங்கிய சிவக்குமார் இப்போது தன்னம்பிக்கை சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் செல்லவேண்டாம் என சொன்னதாகப் புகார் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக அவரது பேச்சில் ‘திருமலையில் தவறான செயல்கள் நடைபெறுவதாகவும் அதனால் பக்தர்கள் யாரும் ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வேண்டாம’ என ஒரு வீடியோவில் பேசியிருந்ததாக தமிழ்மாயன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரை அடுத்து இப்போது திருப்பதி தேவஸ்தானம் நடிகர் சிவக்குமார் மற்றும் இதுபோல பேசிய பலரின் மீது வழக்கு தொடுத்துள்ளது.