1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (11:04 IST)

திருப்பதிக்கு ஃப்ரீ டிக்கெட்: எப்போது கிடைக்கும் தெரியுமா?

இலவச தரிசன டிக்கெட்கள் அனைத்தும்  வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் என தகவல். 
 
கொரோனா லாக்டவுனுக்கு திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் முதியவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
 
இந்நிலையொல் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை அடுத்து அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதனோடு வருகின்ற 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில் இலவச தரிசன டிக்கெட்கள் அனைத்தும்  வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் என தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.