திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (17:56 IST)

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

Chandra Babu Naidu
ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

வரும் தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டு செலவை குறைப்பதற்காக நோக்கமாக கொண்டுள்ளது என்றும், இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

'தீபம் திட்டம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல் குறித்து, இன்று அவர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பெண்களுக்கு ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதுவரை சிலிண்டருக்கு செலவழித்த பணத்தை இனி மற்ற வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும் என்றும், சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என முதல்வர் தெரிவித்தார்.


Edited by Mahendran