திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (16:16 IST)

தென்னிந்தியர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்! - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் இளைஞர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

 

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு எனது ஆட்சியின்போது அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினேன். நீங்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையை குறைத்தீர்கள்.

 

முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை நான் அமல்படுத்தி இருந்தேன். தற்போது அந்த சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்.

 

தேசிய அளவில் கறுவுறுதல் வீதம் 2.1 ஆக உள்ள நிலையில் தென்னிந்தியாவில் 1.6 சதவீதம் மட்டுமே கறுவுறுதல் நடைபெறுகிறது. இப்படியே சென்றால் 2047ம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். தென்னிந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுவதால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K