செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (16:38 IST)

ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்: அதிரடி அறிவிப்பு

bus
ஆகஸ்ட் 11ஆம் தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என ஹரியானா மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி நாடு முழுவதும் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை சகோதர சகோதரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பெண்கள் தங்களது சகோதரனையும் சகோதரியையும் பார்ப்பதற்காக வெளியூர் பயணம் செய்யும் வழக்கம் உண்டு 
 
இந்த நிலையில் ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என ஹரியானா மாநிலம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்திலுள்ள பெண்களுக்கு தினந்தோறும் அரசு பேருந்துகளில் இலவசம் என்ற நிலையில் ரக்சா பந்தன் தினத்தில் ம்ட்டும் ஹரியானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது