திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:01 IST)

புளூடூத் உதவியால் விடையை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது: உபியில் பரபரப்பு

exam
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் போன்றவற்றின் புளூடூத் உதவியால் தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வு மையத்திற்கு வெளியே ஒரு காரில் இருந்து கொண்டு ப்ளூடூத் உதவியால் ஒருசிலர் தேர்வு மையத்தில் இருந்த சிலருக்கு பதில் கூறியதாக தெரிகிறது. அந்த பதிலை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தேர்வு எழுதியவர்கள் பனியனுக்குள் சிறிய மைக்கை  மறைத்து வைத்து இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் காதுக்குள் வைக்கப்பட்டிருந்த ப்ளூடூத் கருவியும் மிகவும் சிறிதாக இருந்ததால் அது வெளியே தெரியவில்லை.
 
இதனை அடுத்து தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் வேறு சிலருக்கும் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.