1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (22:06 IST)

உத்தரபிரதேசத்தில் 4 துணை முதல்வர்களா? புதுமுகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு !

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் முதல்வராக யோகிஆதித்யநாத் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்
 
இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 துணை முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த பலருக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடையாது என்றும் பல புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
முழுக்க முழுக்க புதுமையான ஒரு மந்திரி சபை உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இருக்கும் என்று கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.