நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மாரடைப்பால் மரணம்
நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது 89ஆம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (89). இவர் 10 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சோம்நாத் சாட்டர்ஜிக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், இன்று காலை 8.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.