செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (18:16 IST)

என்னை முதல்வராக்குங்கள்! – மனு கொடுத்த ஸ்ரீகாந்த்!

மஹாராஷ்டிரத்தில் யார் ஆட்சியமைப்பது என்று பாஜக – சிவசேனா இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில் விவசாயி ஒருவர் அளித்த மனு பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

மஹாராஷ்டிரத்தில் வெற்றிபெற்ற பாஜக – சிவசேனா கூட்டணி இடையே ஆட்சியமைப்பதில் உடன்பாடு இல்லாத போக்கு நீடித்து வருகிறது. இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சியை பங்கு கேட்கும் சிவசேனாவை சமாளிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. ஒருபக்கம் இந்த சூழலை பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயி ஸ்ரீகாந்த் விஷ்ணு கடாலே ‘என்னை முதல்வராக்குங்கள்’ என கேட்டுள்ளார்.

அந்த மனுவில் அவர் ”மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டியில் மக்களை கவனிக்க யாரும் தயாராக இல்லை. விவசாயிகள் மழையால் பெரும் சேதங்களை சந்தித்து வருகிறார்கள். அதனால் என்னை முதல்வராக்கினால் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

விவசாயி அளித்துள்ள இந்த மனு மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.