புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (11:19 IST)

எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வராதது ஏன்: கங்கை அமரன் விளக்கம்!

எங்கள் குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வராதது ஏன் என கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார் 
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 92வது பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக நிர்வாகி கங்கை அமரன் பேசும்போது, தனது அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஈடுபட்டதாகவும் ஆனால் அவரை கைது செய்து பொய் வழக்கு போடப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை காப்பாற்ற வில்லை என்றும் அதன் பிறகுதான் எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இப்போது அரசியலில் இருக்கும் ஒரே ஆள் நான் மட்டுமே என்றும் கங்கை அமரன் பேசினார். மேலும் பாஜகவில் உள்ளவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும் கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்றும் பாஜகவின் மிகப்பெரிய பிளசே கடவுள் நம்பிக்கை தான் என்றும் அவர் தெரிவித்தார்