1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (13:16 IST)

லேப்டாப்புக்கு பதில் பெரிய கல்: வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்

Flipkart
லேப்டாப் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பெரிய கல் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் செய்யும் வழக்கம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது 
 
அன்றாட தேவையான மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை பலர் ஆன்லைனில் தான் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரமணா என்பவர் லேப்டாப் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு பிளிப்கார்ட் பார்சலை அனுப்பியது. அந்த பார்சலைஅவர் பிரித்து பார்த்தபோது லேப்டாப்புக்கு பதிலாக பெரிய கல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
 
இதனையடுத்து அவர் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva