1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (09:23 IST)

உருமாறிய கொரோனாவை அழிக்கவும் தடுப்பூசி ரெடி !!

பைசர் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. 

 
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. 
 
இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.