வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (17:16 IST)

இளம் ஜோடிக்கு சுடுகாட்டில் நடந்த திருமணம்

punjab
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் ஒரு இளம் ஜோடிக்கு சுடுகாட்டில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

பஞ்சாம் மா நிலம் அமிர்தரஸில் உள்ள  மொகம்புரா என்ற பகுதியில் ஒரு இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இத்திருமணம் உறவினர்கள் முன்னிலையில், அனைத்துச் சடங்குகளுடன் ஒரு சுடுகாட்டில்  நடத்தப்பட்டது.

அதாவது, பிரகாஷ் கவுர் என்ற மூதாட்டி கட சில ஆண்டுகளாக சுடுகாட்டு வளாகத்தில் தன் பேத்தியுடன் வசித்து வரும் நிலையில், அவரது பேத்திக்கும் உள்ளூரைச் சேர்ந்திய ஒரு வாலிபருக்கும் திருமணப் பேச்சுவார்த்தை முடிந்து தடபுடலாக சுடுகாட்டில்  நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.