மருத்துவமனையில் தீ விபத்து – 8 கொரோனா நோயாளிகள் பலி!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ல அகமதாபாத்தில் ஷ்ரே என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மின் இணைப்புக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4ஆவது மாடியில் உள்ள ஐசியு வார்டில் தீப் பரவியது. இதில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 8 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.
அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர் ஒருவரின் பாதுகாப்பு உடையில் தீ பிடிக்க, அதிர்ச்சி அடைந்த அவர் ஐசியு வார்டை விட்டு வெளியே ஓடி வரும்போது தீ வார்டு முழுவதும் பரவியதாகவும் முதல்கட்ட விசாரணையில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவமானது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 40 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.