வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2017 (17:42 IST)

மாடுகளுக்கு பதில் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் வறுமையால் மாடுகளுக்கு பதில் மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய பிரதேச மாநிலம் சேகோர் மாவட்டத்தில் உள்ள பசந்த்புர் கிராமத்தைச் சேர்ந்த சர்தர் கஹ்லா என்ற விவசாயி மிகவும் வறுமையில் உள்ளார். இதனால் இவரது இரண்டு மகள்களும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர்.
 
விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழுவ சர்தரிடம் மாடுகள் இல்லை. மாடுகள் வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ அவரிடம் பணம் இல்லை. இதனால் அவர் மாடுகளுக்கு பதில் தனது இரு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, சிறுவர்களை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.