அவசரப்பட்டு 14 பயணிகளை தவிக்க விட்டு சென்ற இண்டிகோ விமானம்
கோவாவில் நேற்று இரவு இண்டிகோ விமானம் குறித்த நேரத்தை விட முன்பே புறப்பட்டதால் 14 பயணிகள் விமனத்தை தவறவிட்டு தவித்தனர்.
கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். ஆனால் நேற்று புறப்படும் நேரத்தை விட 25 நிமிடங்களுக்கு முன் கிளம்பியதாக விமனத்தை தவற விட்ட பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் இண்டிகோ விமானம் இதை மறுத்துள்ளது. விமானத்திற்கு செல்லும் பாதையின் கனவு இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. விமானத்தைத் தவற விட்ட பயணிகள் 10.33 மணிக்கு வந்தனர். விமனம் புறப்பட உள்ளதை பலமுறை அறிவித்தோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை.