ரூ.40 ஆயிரம் கடனுக்காக 3 மாத குழந்தையை விற்ற தந்தை.. முறைப்படி வாங்கியதால் நடவடிக்கை இல்லை..!
கர்நாடக மாநிலத்தில் 40 ஆயிரம் கடனுக்காக மூன்று மாத குழந்தையை தந்தை விற்பனை செய்ததாகவும் குழந்தையை வாங்கியவர் முறைப்படி தத்து எடுத்துக் கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் மது பழக்கத்திற்கு அடிமையான முனிராஜ் என்பவர் தொழில் செய்வதாக கூறி பல இடங்களில் கடன் வாங்கியதாகவும் ஒரு கட்டத்தில் அவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த மூன்று மாத குழந்தையை விற்பனை செய்ய அவர் முடிவு செய்ததாகவும் ரூ.40 ஆயிரம் கடனை கட்ட முடியாமல் திணறிய முனிராஜ் தனது குழந்தையை பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி முறைப்படி பதிவு செய்து தத்தெடுத்ததாக தகவல் தெரிய வந்துள்ளதால் அவர் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க வழியில்லை என கூறப்படுகிறது. மேலும் முனி ராஜுக்கும், தத்தெடுத்த தம்பதிக்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை குறித்து தகவல் இல்லை என கூறப்படுகிறது.
Edited by Siva