செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மே 2024 (15:17 IST)

ஜி வி பிரகாஷ்- சைந்தவி தம்பதி பற்றி தீயாய்ப் பரவும் வதந்தி..!

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி வி பிரகாஷ் மிக இளம் வயதில் இசையமைப்பாளராக வெயில் திரைப்படத்தின் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களுக்கு தரமான இசையைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

பின்னர் இவர் நடிகராகவும் அறிமுகமாகி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இப்போது ஜி வி பிரகாஷ் சைந்தவி தம்பதி பற்றி ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதில் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி இருவருமே இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.